Sunday, June 10, 2012

காலக்கணக்கு

ஹோரா (அ) ஹோரை (அ) ஓரை என்றால் என்ன ?

கோளுக்கு உரிமையாக நாளைக் கொள்கிறோம் (உதாரணம் ஞாயிற்றுக் கிழமை ஞாயிறுக்கு உரியது).

கோளுக்கு உரிமையாக மணியையும் கொள்கிறோம்.

ஒரு நாளில் 24 மணி நேரத்திற்கும், மணிக்கு ஒரு கிரகம் வீதம், 7 கிரகங்கள்
(ராஹுவையும் கேதுவையும் தவிர்த்து) மாறி மாறி வரும்.

ஞாயிறன்றே, சூரிய ஓரை 0600 - 0700 , 1300 -1400 , 2000 -2100 என்று 3 முறை 
வருகிறது. ஒவ்வொரு7 மணிக்கும் ஒரே கிரகம் திரும்பவும் வருகிறது.
இதே போன்று மற்ற கிரகங்களும்.


இந்த ஹோரா(HORA)விலிருந்துதான் ஆங்கில HOUR   வந்தது.

ஒரு இடத்தில் சூர்யோதயம் 06-00 மணிக்கு என்று வைத்துக் கொண்டால்,

ஞாயிறன்று காலை 0600-0700 சூரிய ஹோரை எனப்படும்.

திங்களன்று காலை 0600-0700 சந்திர ஹோரை எனப்படும்.

செவ்வாயன்று காலை 0600-0700 செவ்வாய் (அ) அங்காரக ஹோரை எனப்படும்.

இப்படியே போய், சனிக்கிழமை காலை 0600-0700 சனி ஹோரை எனப்படும்.

காலை 0600 மணியிலிருந்து மாலை 0600 மணி வரை கொடுத்துள்ளேன்.

கிழமை  0600-0700 0700-0800 0800-0900 0900-1000 1000-1100 1100-1200 1200-1300 1300-1400 1400-1500 1500-1600 1600-1700 1700-1800
ஞாயிறு  சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி 
திங்கள்  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய 
செவ்வாய்  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர 
புதன்  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ்
வியாழன்  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத 
வெள்ளி  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு 
சனி  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர   


சூரிய ஓரை : வேலைக்கு விண்ணப்பம் போடவும், அதிகாரிகளைச் சந்திக்கவும் சூரிய ஓரையே தகுந்த நேரம். அரசிடம் உதவி கோரினால், சூரிய ஒரையிலேயே முயலவும். பதவி ஏற்கவும் இதுதான் உகந்த நேரம். ஆனால், புதுவீடு குடிபுகுவதற்கு இது உகந்த நேரமே இல்லை.

சந்திர ஓரை : பெண் பார்க்கும் நேரம் இது. பாஸ்போர்ட், பொன்னாபரணங்கள் மற்றும் மாடு கன்று வாங்க சந்திர ஓரையே சரியான நேரம். இதில் வியாபாரம் தொடங்கலாம். கல்வி மற்றும் இசைப் பயிற்சியைத் தொடங்குவதற்கும் இதுவே பொருத்தமான நேரம். புது வீட்டுக்கு மனை போட இது நல்ல நேரம் இல்லை.

செவ்வாய் ஓரை : இதில் நிலம் வாங்குவது, விற்பது குறித்துப் பேசலாம். அணை கட்டலாம். போர்க்கருவிகள் மற்றும் உழைப்புக் கருவிகள் செய்யலாம். போர் தொடங்குவதற்குக் கூட இது சரியான நேரம். பொதுவாக இதில் சுப காரியங்கள் செய்யக்கூடாது. சூளைக்குத் தீ மூட்டுதல் போன்ற நெருப்பு வேலைகளை இந்த நேரத்தில் தொடங்கலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இது உகந்தது.

புத ஓரை : வேலைக்கு விண்ணப்பம் போட இதுவே தகுந்த நேரம். உயர் அதிகாரிகள் பெரிய மனிதர்களுக்குக் கடிதம் எழுதலாம். புதிய கணக்கு ஆரம்பிக்கலாம். சோதிடம், கலை, விஞ்ஞானம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், தேர்வு எழுதுதல், பந்தயங்களில் பங்கு பெறுதல் ஆகியவற்றை இந்நேரத்தில் துவங்கலாம். இது தரகு வேலைக்குச் சிறந்தது. ஆனால், நிலம் வாங்கக் கூடாது. இந்த ஓரையில் பெண் பார்க்கவோ திருமணப் பேச்சைத் தொடங்கவோ கூடாது.

குரு ஓரை : பெரிய மனிதர்களைச் சந்திக்க, பொருளுதவி பெற, முதலீடு செய்ய, சேமிப்பு நிதியில் பணம் வைக்க இதுவே உகந்த நேரம். விதை விதைத்தல், நாற்று நடுதல், மற்ற சுப காரியங்களை இதில் தொடங்கலாம். கலை, கல்வியைத் தொடங்கவும் இது உகந்த நேரம். முதல் விருந்து உண்ணலாகாது.


சுக்ர ஓரை : பெண்களை அந்தரங்கமாக நேசிக்கவும், சந்திக்கவும் சரியான நேரம். சுபகாரியங்கள் நடத்தலாம். கலை பயிலவும், அரங்கேற்றம் செய்யவும் பொருத்தமானது. கடன் வசூல் செய்யலாம். ஆனால், எதையும் பிறருக்குக் கடனாகக் கொடுக்கவே கூடாது. புதிய ஆபரணங்கள் அணியவும், வாகனம் பசுக்கன்று வாங்கவும் இந்த ஓரை பொருத்தமானது. நோய்க்கு மருந்து சாப்பிடலாம். விருந்துண்ணலாம். பொருள் சேர்க்கலாம்.

சனி ஓரை : நிலம் உழ, எரு போட, இரும்பு சாமான்கள் வாங்க, இயந்திரத் தொழில் தொடங்க, காட்டுக் குத்தகை எடுக்க இது சரியான நேரம். இதில் சுப காரியங்களை நீக்குவதுடன், பயணத்தையும் விலக்க வேண்டும்.


மாலை 0600 மணியிலிருந்து காலை 0600 மணி வரை கொடுத்துள்ளேன்.

கிழமை  1800-1900 1900-2000 2000-2100 2100-2200 2200-2300 2300-2400 2400-0100 0100-0200 0200-0300 0300-0400 0400-0500 0500-0600
ஞாயிறு  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத 
திங்கள்  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு 
செவ்வாய்  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர 
புதன்  சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி 
வியாழன்  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய 
வெள்ளி  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர 
சனி  புத  சந்திர  சனி  குரு  செவ் சூரிய  சுக்ர  புத  சந்திர  சனி  குரு  செவ்

2 comments: