ஹோரா
(அ) ஹோரை (அ) ஓரை என்றால் என்ன ?
|
சூரிய ஓரை : வேலைக்கு விண்ணப்பம் போடவும், அதிகாரிகளைச் சந்திக்கவும் சூரிய ஓரையே தகுந்த நேரம். அரசிடம் உதவி கோரினால், சூரிய ஒரையிலேயே முயலவும். பதவி ஏற்கவும் இதுதான் உகந்த நேரம். ஆனால், புதுவீடு குடிபுகுவதற்கு இது உகந்த நேரமே இல்லை.
சந்திர ஓரை : பெண் பார்க்கும் நேரம் இது. பாஸ்போர்ட், பொன்னாபரணங்கள் மற்றும் மாடு கன்று வாங்க சந்திர ஓரையே சரியான நேரம். இதில் வியாபாரம் தொடங்கலாம். கல்வி மற்றும் இசைப் பயிற்சியைத் தொடங்குவதற்கும் இதுவே பொருத்தமான நேரம். புது வீட்டுக்கு மனை போட இது நல்ல நேரம் இல்லை.
செவ்வாய் ஓரை : இதில் நிலம் வாங்குவது, விற்பது குறித்துப் பேசலாம். அணை கட்டலாம். போர்க்கருவிகள் மற்றும் உழைப்புக் கருவிகள் செய்யலாம். போர் தொடங்குவதற்குக் கூட இது சரியான நேரம். பொதுவாக இதில் சுப காரியங்கள் செய்யக்கூடாது. சூளைக்குத் தீ மூட்டுதல் போன்ற நெருப்பு வேலைகளை இந்த நேரத்தில் தொடங்கலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இது உகந்தது.
புத ஓரை : வேலைக்கு விண்ணப்பம் போட இதுவே தகுந்த நேரம். உயர் அதிகாரிகள் பெரிய மனிதர்களுக்குக் கடிதம் எழுதலாம். புதிய கணக்கு ஆரம்பிக்கலாம். சோதிடம், கலை, விஞ்ஞானம் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், தேர்வு எழுதுதல், பந்தயங்களில் பங்கு பெறுதல் ஆகியவற்றை இந்நேரத்தில் துவங்கலாம். இது தரகு வேலைக்குச் சிறந்தது. ஆனால், நிலம் வாங்கக் கூடாது. இந்த ஓரையில் பெண் பார்க்கவோ திருமணப் பேச்சைத் தொடங்கவோ கூடாது.
குரு ஓரை : பெரிய மனிதர்களைச் சந்திக்க, பொருளுதவி பெற, முதலீடு செய்ய, சேமிப்பு நிதியில் பணம் வைக்க இதுவே உகந்த நேரம். விதை விதைத்தல், நாற்று நடுதல், மற்ற சுப காரியங்களை இதில் தொடங்கலாம். கலை, கல்வியைத் தொடங்கவும் இது உகந்த நேரம். முதல் விருந்து உண்ணலாகாது.
சுக்ர ஓரை : பெண்களை அந்தரங்கமாக நேசிக்கவும், சந்திக்கவும் சரியான நேரம். சுபகாரியங்கள் நடத்தலாம். கலை பயிலவும், அரங்கேற்றம் செய்யவும் பொருத்தமானது. கடன் வசூல் செய்யலாம். ஆனால், எதையும் பிறருக்குக் கடனாகக் கொடுக்கவே கூடாது. புதிய ஆபரணங்கள் அணியவும், வாகனம் பசுக்கன்று வாங்கவும் இந்த ஓரை பொருத்தமானது. நோய்க்கு மருந்து சாப்பிடலாம். விருந்துண்ணலாம். பொருள் சேர்க்கலாம்.
சனி ஓரை : நிலம் உழ, எரு போட, இரும்பு சாமான்கள் வாங்க, இயந்திரத் தொழில் தொடங்க, காட்டுக் குத்தகை எடுக்க இது சரியான நேரம். இதில் சுப காரியங்களை நீக்குவதுடன், பயணத்தையும் விலக்க வேண்டும்.
மாலை 0600 மணியிலிருந்து காலை 0600 மணி வரை கொடுத்துள்ளேன்.
|
Also provide the do's and dont's during each hora..
ReplyDeleteExcellent article.
ReplyDelete